திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சங்காபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2018 12:12
திருப்புத்தூர்:திருப்புத்தூர் மேல ஆதித்திருத்தளிநாதர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.ஐந்து கோயில் தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் சோமவார த்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்து வருகிறது.நேற்று (டிசம்.,3ல்) மூன்றாவது சங்காபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி முன் நெல்பரப்பி அதில் சிவலிங்க வடிவில் வைக்கப்பட்ட 108 சங்குகளில் நெய்தீபம் ஏற்றப்பட்டு சிவாச்சாரியர்களால் வில்வ இலைகளால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர்.