Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேஷாத்ரி சுவாமிகள் 90வது ஆண்டு ஆராதனை ... ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் வரும் 27 வரை திறப்பு ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமாலுக்கு கால்நடைகள் காணிக்கை: பராமரிக்க கோசாலை துவக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
01:12

உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் கால்நடைகளை பராமரிக்க, கோசாலை துவக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில், அருகிலுள்ள கிராமங்களில், வளர்க்கப்படும் சலகெருதுகள் கோவில் வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

சிறப்பம்சமாக, பொங்கலன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலுக்கு சொந்தம் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே உள்ளது. இதனால், ஆண்டுதோறும் பொங்கலையொட்டி நடக்கும் திருவிழாவில், கன்றுகளை தானமாக அளிக்கின்றனர். மேலும், கால்நடை வளம் பெருக, ஆடு, சேவல் ஆகியவற்றையும் கோவிலுக்கு வழங்கும் பழக்கம் உள்ளது.இவ்வாறு, கோவிலுக்கு வழங்கப்படும் கால்நடைகளை இந்து அறநிலையத்துறையினர், இரண்டு நாட்கள் கோவிலில் வைத்து பராமரித்த பின்னர், பிற மாவட்டங்களிலுள்ள கோசாலைக்கு அனுப்புகின்றனர். இச்செலவிற்காக தானம் வழங்கும் பக்தர்களிடம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கட்டண முறையால், பாதிக்கப்படும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். ஆண்டுதோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் தானமாக வழங்கப்படுகின்றன.கால்நடைகளுக்கென பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகள் அங்கேயே பராமரிக்க வேண்டும், என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.பக்தர்கள் கூறுகையில், ஆல்கொண்டமால் கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகளை கோவில் அருகிலேயே வைத்து பராமரிக்க கோசாலை அமைக்க வேண்டும். தானமாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரித்து வளர்க்க தேவையான தீவனப்புல், தண்ணீர் ஆகியவற்றை கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், எளிதாக பெற முடியும். கால்நடைகளுக்கென பிரத்யேகமான கோவிலில், கோசாலை அமைப்பது அக்கோவிலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar