Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் பெருமாள் கோயில்களில் ... தேனி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம் தேனி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

19 டிச
2018
12:12

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர், சிவ-விஷ்ணு கோவிலில் ஜலநாராயணி தாயார் சமேத ஜலநாராயண பெருமாளுக்கு, வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, கருட வாகனத்தில், ்ரீதேவி பூ தேவி சமேத சீனிவாச பெருமாள் காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில், உற்சவர் வீரராகவர், பூதேவி, ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், சத்தியமூர்த்தி தெருவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், பூங்கா நகர் என்.ஜி.ஓ., காலனி சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட, அனைத்து பெருமாள் கோவில்களிலும், சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி ஓட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திருத்தணி, டிச.19- வைகுண்ட ஏகாதசி ஓட்டி அனைத்து பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணிமுருகன் கோவிலின் துணை கோவிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி ஓட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை முதல் பக்தர்கள் மாலை, 6:00 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர். சில பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.அதே போல் திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள லட்சுமிநரசிம்மா சுவாமி, நெமிலி வைகுண்ட பெருமாள், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர், கொல்லகுப்பம் வெங்கடேஸ்வர பெருமாள், திருத்தணி பலிஜா கல்யாண மண்டபம் எதிரில் அமைந்த பஜனை கோவில் உள்ள திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசி ஓட்டி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar