Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவாரம் முருகன் கோயிலில் மண்டல பூஜை ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கேட் அகற்றம் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கேட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வரூப கோதண்டராமர் சிலை செல்வதில் சிக்கல்
எழுத்தின் அளவு:
விஸ்வரூப கோதண்டராமர் சிலை செல்வதில் சிக்கல்

பதிவு செய்த நாள்

20 டிச
2018
11:12

செஞ்சி: விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, குறுகலாக உள்ள கோட்டை மதில் வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால், மாற்று வழியில் கொண்டு செல்வது குறித்து, ஆய்வு நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, ஈஜிபுரத்தில் பிரதிஷ்டை செய்ய, திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகோட்டையில் இருந்து, 2.30 லட்சம் கிலோ எடையில், 64 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, 240 சக்கரங்கள் பொருத்திய, 80 அடி நீளம் உள்ள, ‘கார்கோ’ லாரியில் கொண்டு செல்கின்றனர்.  கடந்த வாரம் புறப்பட்ட சிலை, நேற்று முன்தினம் இரவு, செஞ்சியை அடைந்தது.

செஞ்சியில், சங்கராபரணி ஆற்று பாலம், இந்த எடையை தாங்கும் வகையில் இல்லை என்பதால், மேல்களவாய் ரோடு தரைப் பாலம் வழியாக, செஞ்சியை கடந்து செல்ல முடிவு செய்திருந்தனர். இதற்கு இடையூறான மின் கம்பங்களை அகற்றவும், ஏற்பாடுகள் செய்திருந்தனர்.  நகர பகுதியை கடந்து, செஞ்சி கோட்டை வழியாக சிலை செல்ல வேண்டும். இதில் ராஜகிரியையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் இணைக்கும் மதில் பகுதியில், அகலம், 26 அடியாக உள்ளது. சிலை உள்ள லாரி செல்ல, 28 அடி அகலம் தேவை. எனவே, இந்த வழியில் சிலையை கொண்டு செல்ல, இந்திய தொல்லியல் துறையினர் ஆட்சேபனை தெரிவித்து, நேற்று, செஞ்சி, டி.எஸ்.பி.,யிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, சிலையை மாற்று வழிகளில் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகளை, சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், சிலை செஞ்சியில் இருந்து கிளம்ப, மேலும் சில நாட்கள் ஆகும் நிலை என தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar