Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை முருகனை தரிசிக்க... மயில் ... ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சுவாமி கோவையில் பக்தர்களுக்கு அருளாசி ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் திருவாதிரை பண்டிகை கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
சிவன் கோவில்களில் திருவாதிரை பண்டிகை கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
02:12

மார்கழி மாத பவுர்ணமி நாளான நேற்று, திருவாதிரை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது, ஆருத்ரா தரிசனம் என, அழைக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நடராஜப் பெருமானின் அருளைப் பெற்றனர். மார்கழி மாதம், தக் ஷிணாயன காலத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு, இம் மாதமே அதிகாலைப் பொழுது. அதை, பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். அக்காலத்தில், நடராஜரை தரிசிக்க, தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம்.

திருவாதிரை நோன்பு என்பது, திருவாதிரை நட்சத்திரனுடன் கூடிய பவுர்ணமி நாளில், உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள். திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய, 10 நாட்களில், இறுதி நாளாகவும், மார்கழித் திருவாதிரை அமைகிறது. அந்நாளில், உளுந்து மாவினால் செய்த களி, இறைவனுக்கு படைத்து, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்; திருவான்மியூர், மருந்தீஸ்வரர்; மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர்; பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர்; திருவொற்றியூர், தியாக ராஜர் கோவில்; கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர்; பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது.ஆருத்ரா தரிசனத்தையொட்டி, பல கோவில்களில், நேற்று அதிகாலை ருத்ர ஜபம், பாராயணம், நடராஜ பெருமானுக்கு, 14 திரவியங்களால் அபிஷேக, அலங்காரம் நடந்தது.

நேற்று (டிசம்., 23ல்) மாலை, 5:00 மணி முதல் சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, தீப நடனம், அஷ்டோத்திர அர்ச்சனை ஆகியவை நடந்தன.ஓட்டேரி குயப்பேட்டை, கந்தசுவாமி கோவில்; புழல் காந்தி பிரதான சாலை, சொர்ணாம்பிகை - திருமூலநாதர் கோவில்; செங்குன்றம் பாளையத்தம்மன் கோவில்களிலும், நேற்று (டிசம்., 23ல்) காலை, ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar