Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூர் சிவன் கோவில்களில் ... ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் மாவட்டத்திலுள்ள, சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2018
04:12

சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள, சிவன் கோவில்களில், நேற்று, (டிசம்., 23ல்)ஆருத்ரா தரிசன பூஜை கோலாகலமாக நடந்தது.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நடராஜர், சிவகாமி அம்மனுக்கு, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்)நள்ளிரவு, 12:00 மணி முதல், விடிய விடிய, 12 வகை திரவியங்களில், அபிஷேகம்ம் நடந்தது.

நேற்று (டிசம்., 23ல்) காலை, நடராஜர் சமேத சிவகாமியம்மன், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தனர். மூலவர் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகைக்கு, தங்க கவசம் சாத்தப்பட்டது.

உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சிவகாமியம்மன், நடராஜர், மூலவர் திருமேனி, உற்சவர் திருமேனிகளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், கரும்புச்சாறு உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சந்தனகாப்பு மற்றும் சர்வ அலங்காரத்தில், சிவகாமியம்மன், நடராஜர், பல்லக்கில் எழுந்தருளி, ஆனந்த களி நடனம் ஆடியபடி, பக்தர்கள், கோவிலை வலம்வரச்செய்து, ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தனர். பின், சிவகாமியம்மன் கோவிலுக்கு சென்று, கதவை அடைத்து நடராஜரை உள்ளே விட மறுத்தது, சுந்தரமூர்த்தி, நாயனார் இடையே தூது சென்று சமாதானம் செய்த திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அதை, கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

அதேபோல், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், செவ்வாய்ப்பேட்டை அம்பலவாணர், சீரகாபாடி, 1,008 சிவாலயம், தாரமங்கலம் கைலாசநாதர், ஆத்தூர், கோட்டை, காயநிர்மலேஸ்வரர், வசிஷ்டநதி தென்கரை கைலாசநாதர், தென்பொன் பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், நடராஜர், சிவகாமியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்கள், பனிப்பொழிவை பொருட்படுத்தாமல், வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar