Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் ... நீலகிரியில் பூகுண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம் நீலகிரியில் பூகுண்டம் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் தயாராகிறது தீப மை பிரசாத பாக்கெட்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் தயாராகிறது தீப மை பிரசாத பாக்கெட்

பதிவு செய்த நாள்

29 டிச
2018
11:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணி துவங்கியுள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில், நவ., 23ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது.

இதில் சேகரிக்கப்பட்ட, தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை உடன், தர்ப்பை, மாங்குச்சி கட்டை, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்பட்ட விபூதி, சுவாமி அபிஷேக விபூதி, வாசனைப் பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்ற பொருட்கள் சேர்த்து ஒன்றாக கலக்கப்பட்டு, அதை அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ளது. தீப மை பிரசாதத்தை பக்தர்கள் இடுவதால், ஏவல் பயம் நீங்கி, காரிய சித்தி பலன் கிடைக்கிறது என்பது, பக்தர்களின் நம்பிக்கை.மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் தீப மை, பிரசாத விபூதி, குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து வழங்கப்படும். மற்ற பக்தர்கள், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar