Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் ... கோவை ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் புஷ்பாஞ்சலி கோவை ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

30 டிச
2018
12:12

 சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்பட உள்ளது.ஜன., 14-ம் தேதி மகரஜோதி தரிசனம்  நடைபெறுகிறது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.மண்டல பூஜை முடிந்து, 27-ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன்பின், மகரவிளக்கு காலத்துக்கான ஆயத்த  பணிகள் நடைபெற்றன.


தேவையான பொருட்கள் அனைத்தும், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. சுற்றுப்புறங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.இதைத் தொடர்ந்து, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக,  இன்று மாலை, நடை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு, 11:00 மணிக்கு  நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்ததும், அபிஷேகத்துக்கு பின், மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைப்பார். ஜன., 18 வரை  நெய்யபிஷேகம் நடைபெறும்.மகரஜோதி தரிசனம், ஜன., 14-ம் தேதி நடைபெறுகிறது. அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள், 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படுகின்றன.மண்டல  காலத்தின் கடைசி நாட்களில் பெண்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மகரவிளக்கு காலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போவதில்லை என,  போலீசார் முடிவெடுத்து உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar