Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் புனித நீராடும் ... ஐயப்பன் கோவில் விழா: பாலக்கொம்பு ஊர்வலம் ஐயப்பன் கோவில் விழா: பாலக்கொம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்

பதிவு செய்த நாள்

31 டிச
2018
11:12

திருத்தணி: முருகன் கோவிலில் இன்று, திருப்படி திருவிழாவும், நாளை, புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளன. ஓராண்டிற்கு, 365 நாட்களை குறிக்கும் வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், இக்கோவிலில், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி திருப்படித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று, திருப்படித் திருவிழா நடக்கிறது. படித்திருவிழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.இதுதவிர, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றுவர்.தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், மலைக்கோவிலுக்கு வந்து, பக்தி பாடல்களை பாடியவாறு, மலைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவர்.இன்று காலை, 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உடன், வெள்ளி மயில் வாகனத்தில், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும், நாளை, புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிப்பர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனத்தை ஒட்டி, கோவில் வளாகம் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்கள், வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar