Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூர் அக்னி குளத்தில் ... திருச்செந்தூர் கோவில் கருவூலச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2012
11:02

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை செய்து "திருக்கம்பம் நடும் விழா இன்று நடக்கிறது. பொள்ளாச்சி, மாரியம்மன் கோவிலில் கடந்த பிப்., 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. விழாவையொட்டி, கோவில் முன் "திருகம்பம் இன்று நடப்படுகிறது. பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவிலில் இருந்து, பூஜிக்கப்பட்ட "கம்பம் தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்படும். கம்பத்தில், நவதானியங்கள் கட்டப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, இரவு 10.00 மணிக்கு கம்பம் நடப்படவுள்ளது. கோவில் முன் வைக்கப்படும் திருக்கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வழக்கம். வரும் 28ம் தேதி கம்பத்தில் கோவில் சார்பில் பூவோடு வைக்கப்படுகிறது. வரும் 2ம் தேதி முதல் பொதுமக்கள் சார்பில் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களும் பூவோடு எடுத்து அம்மனை நேர்த்திகடனை செலுத்துகின்றனர். அன்று இரவு 11.00 மணிக்கு கிராம சாந்தியும், வரும் 3ம் தேதி விழாவுக்கான கொடிகட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 7ம் தேதி காலை 6.00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு படைத்து அம்மனை வழிபாடு செய்கின்றனர். காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளும் அம்மன், முக்கிய பகுதிகளின் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று முதல் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் தரிசனத்திற்காக தேர் நிறுத்தங்களில் தேர் நிறுத்தப்பட்டு, வரும் 9ம் தேதி இரவு 7.00 மணிக்கு மீண்டும் தேர், கோவிலில் வந்த நிலை அடைகிறது. பின், இரவு 10.00 மணிக்கு பாரிவேட்டை மற்றும் தெப்பத்தேர் வைபவம் ஆகியவை நடக்கிறது. வரும் 10ம் தேதி மஞ்சள் நீராடுதல், 12ம் தேதி மகா அபிஷேகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் நாகையா, பரம்பரை அறங்காவலர் மகாலிங்கம் உட்பட பலர் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar