இளம்பெண்களை 18 படியில் அழைத்து செல்ல திட்டம்: தயார் நிலையில் கண்ணுார் போலீஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2019 02:01
சபரிமலை:சபரிமலையில் இரண்டு பெண்களை தரிசனம் நடத்த வைத்து, ஹிந்து ஐதீகத்தை களங்கப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மார்க்சிஸ்ட் அரசு, அடுத்து 18-ம் படி வழியாக இளம் பெண்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக கண்ணுாரை சேர்ந்த போலீசார் இருமுடியுடன் தயார் நிலையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் பிந்து, கனகதுர்கா ஆகியோர் தேவசம்போர்டு ஊழியர்களுக்கான வாசல் வழியாக சென்று தரிசனம் நடத்தினர். இது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.இந்நிலையில் மேலும் சில பெண்களை தரிசனத்திற்காக அழைத்துச் செல்லும் முயற்சியில் முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டுள்ளார். இளம் பெண்களை அழைத்து வரும்போது போலீசார் குவிக்கப்படுவதால் பக்தர்கள் திரள்கின்றனர். இதை தவிர்க்க முதல்வரின் சொந்த மாவட்டமான கண்ணுாரில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பம்பையில் தயார் நிலையில் உள்ளனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் தவறவிடும் இருமுடிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இருமுடிகளை இளம்பெண்களுக்கு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தகவல் கசிந்ததால் சபரிமலை கர்ம சமிதியை சேர்ந்த பக்தர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன்நாயர், இருளின் மறைவில் பெண்களை தரிசனம் செய்ய வைத்தது சரியானது அல்ல, என தெரிவித்துஉள்ளார். பினராயி விஜயன் ஏற்பாட்டில் நடந்த பெண்கள் மதில் சுவர் குழுவின் தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசனின் மனைவி பிரீதி, இருள் சூழ்ந்த நேரத்திலா பெண் உரிமையை நிலை நாட்டுவது. இதற்கு தான் பெண் மதில் சுவர் நிகழ்ச்சி நடந்ததா. இந்நிகழ்ச்சியை நடத்திய பிறகு பெண்களை தரிசனம் செய்ய வைத்து, பக்தர்களை வஞ்சித்து விட்டார் பினராயி விஜயன் என பெண்கள் தரிசனம் நடத்தியதற்காக கவலை தெரிவித்துள்ளார்.