திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு கள்ளத்தனமாக சென்ற 2 பெண்கள், அது தொடர்பாக என்டி டிவி.,க்கு பேட்டி அளித்துள்ளனர்.
ஆங்கில செய்தி சேனலான என்டி டிவி பொதுவாக இடதுசாரி கொள்கைகள் மற்றும் மோடி எதிர்ப்புகளுக்கு ஆதரவான தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கள்ளத்தனமாக சபரிமலை கோயிலுக்கு சென்ற 2 பெண்களிடம் பேட்டி வாங்கி, அதனை ஒளிபரப்பி வருகிறது.
சபரிமலைக்கு எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில், டிரைவர் இருக்கைக்கு அருகே மறைந்தபடி பிந்து, கனக துர்கா என்ற 40 வயதுடைய பெண்களை ஏற்றி கேரள அரசே அனுப்பி வைத்துள்ளது. அங்கிருந்து சீருடை அணியாத போலீசார், பக்தர்கள் யாரும் கவனிக்காத சமயத்தில் மாற்று பாதை வழியாக அப்பெண்களை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் என்டி டிவி.,க்கு அளித்த பேட்டியில், எங்கள் உயிருக்கு இப்போதும் ஆபத்து உள்ளது என தெரியும். ஆனாலும் கோயிலுக்கு செல்ல விரும்பினோம். பாலின சமநிலை மற்றும் உரிமையை காட்டுவதற்காகவே சென்றோம். எங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இதை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள். நாங்கள் சபரிமலை செல்வதற்கு எங்கள் வீட்டினரே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கேரள கம்யூனிஸ்ட் அரசு தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து எங்களை அழைத்து சென்றனர் என தெரிவித்துள்ளனர்.
கம்யூனிஸ்டுகளே காரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை கிடையாது. சபரிமலைக்கு கள்ளத்தனமாக சென்ற வந்த 2 பெண்களும் இடதுசாரி கொள்கை உடையவர்கள். வெறும் வெற்று விளம்பரத்திற்காகவும், தாங்கள் தான் முதலில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தினாலுமே இவர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என அய்யப்ப பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.