Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தி.நகரில் தர்ம உபநயனம் பெரியகுளம் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை பெரியகுளம் காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பேட்டை துள்ளலில் பக்தர்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
சபரிமலை பேட்டை துள்ளலில் பக்தர்கள் உற்சாகம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
11:01

சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக,பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல், நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், உற்சாகத்துடன் பங்கேற்றனர். இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும், 14ல், மகரவிளக்கு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடு, தீவிரமாக நடந்து வருகிறது. உயர் நீதிமன்றம் நியமித்துள்ள கண்காணிப்பு குழுவினர், இரண்டு நாட்களாக, பம்பை மற்றும் சன்னிதானத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். சபரிமலை மற்றும் பம்பையில், 5,000 போலீசாரும், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில், தேவைக்கேற்ப போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை முதல் தேதியிலிருந்து, எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடந்தாலும், மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடக்கும், அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல், மிகவும் பிரசித்தி பெற்றது.

நேற்று பகல், 12:45க்கு, ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை பார்த்ததும், பேட்டை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து, அம்பலப்புழா பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகளுடன், பேட்டைத்துள்ளி வந்தனர்.அவர்கள், பெரிய சாஸ்தா கோவிலில் பேட்டைத் துள்ளலை நிறைவு செய்த பின், பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர். இதுபோல ஆலங்காடு பக்தர்கள், மாலை, 3:00 மணிக்கு, வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை பார்த்ததும், பேட்டை துள்ளினர். இதில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத்துள்ளலுடன், பேட்டைதுள்ளல் நிறைவு அடைந்தது. மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள், இன்று பந்தளம் வலியக் கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்படுகிறது. அதிகாலை, 4:30 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் இந்த திருவாபரணங்கள், உச்சபூஜைக்கு பின், பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்புடன் புறப்படுகிறது. இந்த திருவாபரண பவனி, வரும், 14ல், சன்னிதானம் வரும். மகரவிளக்குக்கு முன்னோடியாக, பிரசாத சுத்தி பூஜைகள், இன்று நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar