Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நன்மை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ஆதாயம்
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ஆதாயம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
03:01

தற்போது சாதகமற்ற இடத்தில் இருக்கும் புதன் ஜன.16ல் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கு மாறி நன்மை செய்வார். இந்த மாதம் சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து ஜன.30ல் தனுசு ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் செவ்வாய் ஜன.31வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை காரணம் சனி, குருபகவானால் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். இவர்கள் காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தருவார்கள்.

உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும். சுக்கிரனால் மதிப்பு மரியாதை உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஜன.16க்கு பிறகு பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஜன.27,28,29ல் பெண்களால் நன்மை ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.3,4,5ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் ஜன.31க்குள் ஆடை, ஆபரணம் சேரும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஜன.30க்கு பிறகு பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பணியாளர்கள் சுக்கிரன், குருவின் பலத்தால் வேலையில் திருப்தியான நிலை காண்பர். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அரசு ஊழியர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஜன.16க்கு பிறகு புதனால் காரிய அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும். ஜன.21,22 ல் திடீர் வருமானம் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பிப்.1க்கு பிறகு வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.
வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க ஏற்ற காலகட்டம். சூரியனால் பெண்களிடம் விரோதம் ஏற்படும். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். பகைவர் தொல்லை ஜன.16க்கு பிறகு மறையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் கையில் அதிக பணம் புழங்கும். ஜன.31க்கு பிறகு பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க நேரிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்காது. பிப்.6,7ல் மனகுழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஜன.15க்குப் பிறகு கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு சாதகமான காலமாக அமையும்.  நெல், கோதுமை, மஞ்சள், சோளம், கேழ்வரகு போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் ஜன.31 வரை உண்டு. வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக அமையும்.
பெண்கள் குதூகலமாக வாழ்வு நடத்துவர். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். ஜன.16 க்கு பிறகு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சுயதொழில் புரியும் ஜன.15,16,பிப்.11,12 சிறப்பான நாட்களாக அமையும். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: ஜன.15,16,22,23,24,25,31,
* பிப்.1,2,3,6,7,11,12
* கவன நாள்: ஜன.17,18 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,5
* நிறம்: வெள்ளை, கருப்பு

* பரிகாரம்:
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பாலபிஷேகம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar