Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வெற்றி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வீடு யோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வீடு யோகம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
03:01

இந்த மாதம் முற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்கும் காரணம் சுக்கிரன் ஜன.30 வரையும், செவ்வாய் ஜன.31 வரையும் நற்பலன் அளிப்பர். மேலும் குரு மாதம் முழுவதும் நன்மை தரக் காத்திருக்கிறார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும்.

குருவால் பொருளாதார வளம் மேம்படும். செவ்வாயால் ஜன.31 வரை எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம்.  புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஜன.25,26ல் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பொன், பொருள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதனால் உறவினர் வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. குறிப்பாக ஜன.15,16,பிப்.11,12ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் ஜன.30,31ல் சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். அவர்களால் நன்மை கிடைக்கும்.  
புதனால் வீட்டில் இருந்த பிரச்னை, உறவினர் வகையில் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன பிப்.1க்கு பிறகு மறையும்.  
பணியாளர்கள் குருவால் சிறப்பான பலன் பெறுவர்.

புதிய பதவி கிடைக்கும். புதனால் வேலைப் பளுவும், அலைச்சலும் இருந்தாலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். ஜன.6க்கு பிறகு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. பிப்.1க்கு பிறகு செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். செவ்வாயால் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜன.31க்குள் கேட்டு பெறவும். ஜன.27,28,29ல் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.  
தொழில், வியாபாரத்தில் சனிபகவானால் வெளியூர் பயணம் ஏற்படலாம். எதிரிகளால் அவ்வப்போது இடையூறு ஏற்படலாம்.  சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்துப்பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார்.  செவ்வாயால் சுக்கிரனால் வங்கியில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். ஜன.19,20ல் வாழ்வில் மகிழ்ச்சியான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். ஜன.30க்கு
பிறகு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல பெயரையும், பொருளாதர வளத்தையும் பெறுவர்.
ஜன.30க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அதிகமாக  உழைக்க வேண்டியதிருக்கும். அதற்குரிய பலன்கள் இப்போது இல்லாவிட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

விவசாயிகள்  போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். நெல், கேழ்வரகு, கம்பு, கோதுமை போன்ற தானிய வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். பயறு வகைகள் மற்றும் மஞ்சள் மூலம் வருமானம் காணலாம்.   

பெண்கள் மகிழ்ச்சியுடன்  காணப்படுவர். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பிப்.8,9,10ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். பிப்.3,4,5 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.1க்கு பிறகு சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

* நல்ல நாள்: ஜன.19,20,21, 22, 27,28,29,30,31, பிப்.3,4,5,8,9,10
கவன நாள்: ஜன.23,24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
●  வெள்ளிக்கிழமையில் காளிக்கு நெய் விளக்கு
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar