Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: ... சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் சபரிமலை சன்னிதானத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு பொங்கல்: தஞ்சை பெரியகோவில் நந்திக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
10:01

தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 1டன்  அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

Default Image
Next News

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று மாலை, பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து மாட்டு பொங்கலான இன்று காலை அதிகாலை லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு என  1 டன் அளவில் பொருள்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும், நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar