Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ... அய்யலுாரில் இருந்து பழநிக்கு முதுகில் தேர் இழுக்கும் பூசாரி அய்யலுாரில் இருந்து பழநிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமங்களில் தொடரும் பாரம்பரிய ஒற்றுமை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிராமங்களில் தொடரும் பாரம்பரிய ஒற்றுமை விழா

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
12:01

உடுமலை: உடுமலை கிராமங்களில், தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாச்சோறு, கும்மியால் களை கட்டியது. கிராமங்களில், குழந்தைகள், பெண்கள் ஒன்றிணைந்து, தைப்பூசம் கொண்டாடுவது பாரம்பரிய முறையாக உள்ளது. தை பவுர்ணமிக்கு, ஒன்பது நாட்களுக்கு முன்பு, இந்நிகழ்வு துவங்கும்.தினமும் மாலை நேரத்தில், குழந்தைகள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு எடுத்து வந்து, பொது இடத்தில் கும்மியடித்து, நிலாச்சோறு மாற்றி, அனைத்து உணவுகளையும் ஒன்றாக இணைந்து நிலாச் சோறு உண்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

அதே போல், தைப்பூசத்தன்று, ஊர்வலமாக பெண்கள், குழந்தைகள் வீடுகளிலிருந்து உணவு, மாவிளக்கு, தானியங்கள், இனிப்புகள் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். கிராமத்தின் பொது இடத்தில் தைப்பூச தேர் வரைந்து, அனைவரும் ஒற்றுமையாக கூடி வழிபடுவதையும், இன்றளவும் கிராமங்களில் கொண்டாடி வருகின்றனர். கிராமங்களில் வேளாண் வளம், கால்நடை வளம் பெருகவும், இல்லங்களில் அனைத்து செல்வங்களும் பெருகவும், பாடலுடன் கும்மியடித்து ஒற்றுமையை எற்படுத்தும் வகையிலும், நிலவுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும், தை பவுர்ணமியன்று, இந்த விழா கொண்டாடப்படுகிறது. தளி கிராமத்தில் வீடுகளிலிருந்து, ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு கிராமத்திலுள்ள குழந்தைகள், பெண்கள் வந்து, வழிபட்டனர். தொடர்ந்து, பொது இடத்தில், தென்னை ஓலையில் பசும்பந்தல் அமைத்தனர். வாழை உள்ளிட்ட பழங்களால் தோரணம் கட்டினர். தைப்பூசத்தேர் வரைத்து, மாவிளக்கு, உணவு, தானியம், முளைப்பாலிகை, உலக்கை, தேங்காய், பழம் வைத்து, முருகனை வணங்கி தேரை சுற்றி வந்து கும்மியடித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிலாச்சோறு வழங்கப்பட்டது. அதே போல், உடுமலையை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில், நிலாச்சோறு கும்மி என தைபூசத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar