Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சியில் போலீஸ் சார்பில், பாத ... கோவை ராம்நகர் ராமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி கோவிலில் இடைத்தரகர்களுக்கு, செக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
01:01

வடபழனி : வடபழனி முருகன் கோவிலில், இடைத்தரகர்களை கட்டுப்படுத்த, திருமணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், கோவில் நிர்வாகமே வழங்குகிறது.

சென்னை, வடபழனியில் உள்ள வடபழனி முருகன் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, முகூர்த்த நாட்களில், சென்னையை சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, திருமணம் செய்கின்றனர்.

அதன்படி, முகூர்த்த நாட்களில் இங்கு, நூற்றுக்கணக்கான திருமணம் நடைபெறுவது வழக்கம்.இந்த கோவிலில் திருமணம் செய்ய, 2,600 ரூபாய் அளித்து, பதிவு படிவம் பெற வேண்டும். இந்த படிவத்தை வாங்க வருவோரை அடையாளம் காணும் இடைத்தரகர்கள், நாங்கள் திருமணத்தை நடத்தி தருகிறோம் எனக்கூறி, 12 ஆயிரம் ரூபாய் வரை பெற்று விடுகின்றனர்.

மேலும், திருமணத்திற்கு தேவையான ஹோம பொருட்கள், மாலை, மேளம் போன்றவற்றி ற்கு, மேலும் பல ஆயிரம் ரூபாய் பறித்து விடுகின்றனர். சில இடைத்தரகர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர்.இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால், கோவிலுக்குள் நடக்கும் அனைத்து திருமணங்களும், அவர்களது ஏற்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இதனால், ஏழை, எளிய பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.இது குறித்து, பலமுறை நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு காணும் விதமாக, 4,765 ரூபாய் கட்டணம் செலுத்தினால், திருமணம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகமே செய்து தர முடிவு செய்துள்ளது.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவிலில் நடக்கும் திருமணத்திற்கு, இடைத்தரகர்கள், பல ஆயிரம் ரூபாய் வசூலித்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து, பல்வேறு புகார் எழுந்தன. இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக, திருமணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து தர முடிவு செய்தோம். அதன்படி, 4,765 ரூபாய் செலுத்தினால், திருமணத்திற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். பக்தர்கள், இடைத்தரகர்களை நம்பி, இனி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.நடைபாதை ஆக்கிரமிப்புவடபழனி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

முகூர்த்த நாட்களில், கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான, பழனி ஆண்டவர் கோவில் தெருவின் நடைபாதைகளை, அங்குள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். நடைபாதையை ஆக்கிரமித்து, தற்காலிக கடை அமைத்திருந்தவர்கள், தற்போது, நிரத்தர கட்டடம் கட்டி உள்ளனர்.சாலையோரங்களில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள், சாலையின் நடுவில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பக்தர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar