Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை கருமாரியம்மன் கோவில் ... பழநி கோவில் ரோப் கார் இரு நாட்கள் நிறுத்தம் பழநி கோவில் ரோப் கார் இரு நாட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகு கேது பெயர்ச்சி: பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகு கேது பெயர்ச்சி: பரிகாரம் செய்ய வேண்டியது யார்?

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
10:02

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேரெதிர் ராசியில் இருக்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசுவிற்கும் இன்று(பிப்.,13) பகல் 2:02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2020 ஆக.31 வரை இவர்கள் இங்கு தங்கியிருப்பர். இதை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட ராகு கேது கோயில்களில் லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடக்கும்.

ராகு:
நற்பலன்    :    மேஷம், சிம்மம், மகரம்
சுமார்    :    கன்னி, துலாம், தனுசு, கும்பம்
பரிகாரம்    :    ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மீனம்

ஸ்லோகம் :

அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திரா தித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்

பொருள்: பாதி உடலைக் கொண்டவரே! பெரும் வீரரே! சந்திர, சூரியரை கிரகணமாக பிடிப்பவரே! சிம்ஹிகையின் கர்ப்பத்தில் வந்தவரே! ராகுவே! உம்மை வணங்குகிறேன்.

கேது:
நற்பலன்    :    கடகம், துலாம், கும்பம்
சுமார்    :    மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்
பரிகாரம்    :    ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்

ஸ்லோகம்:
பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரஹ மஸ்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்

பொருள்: புரசம் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவரே! கோபம் மிக்கவரே! கோர வடிவானவரே! கேது பகவானே! உம்மை வணங்குகிறேன். வாழ்வில் சாதனை படைக்க சாயாகிரகங்களான ராகு கேதுவை இன்று வழிபடுவோம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar