பிப்.25ல் ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2019 12:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் பிப்.,25ல் நடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பிப்.,25ல் கோயில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிக் கம்பத்தில் காலையில் கொடியேற்றம் நடக்கிறது.
சிவராத்திரி விழாவான மார்ச் 4ல் கோயிலில் இரவு முழுவதும் நடை திறந்து சுவாமி சன்னதியில் சிறப்பு அபிேஷகம், பூஜை நடக்கிறது. அன்றிரவு வெள்ளி ரதம் வீதி உலா நடக்கிறது. மார்ச் 5ல் தேரோட்டத்தையொட்டி அலங்கரித்த திருத்தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் ரதவீதியில் உலா வருவர். மார்ச் 6ல் அமாவாசையையொட்டி சுவாமி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்த வாரி நடைபெறும். கோயிலில் தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் மாசித் திருவிழாவில் தினமும் சுவாமி புறப்பாடு, கோயில் நந்தவன கலையரங்கில் பக்தி இன்னிசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.