Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருப்புக்கோட்டை மீனாட்சி ... பழநியில் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிராஜபுரத்தில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
04:02

சாயல்குடி : கன்னிராஜபுரத்தில் பத்திரகாளியம்மன், உஜ்ஜையினி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

கன்னிராஜபுரத்தில் சித்தி விநாயகர், கன்னி விநாயகர்,உஜ்ஜையினி காளியம்மன், பத்திர காளியம்மன், மதுரை வீர சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி வேலைகள் முழுவீச்சில் நடந்தது.கடந்த பிப்., 15 வெள்ளிக்கிழமை முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கோ பூஜை, லட்சுமி பூஜை, திரவிய சமர்ப்பணம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது. டி.எம்.கோட்டை சிவாச்சாரியார் வெங்கடேஷ் குழுவினர்கள், நேற்று (பிப்., 17ல்) காலை 11:00 மணியளவில் கோபுர விமான கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானமும், இரவில் 20 அடி உயரமுள்ள தேரில் மூலவர்களின் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. ஓய்வு பெற்ற சென்னை கூடுதல் எஸ்.பி., குழந்தைக்கனி தலைமை வகித்தார்.

தொழிலதிபர் டி.பால்பாண்டியன்,சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன், ஓய்வு ஆசிரியர் ராஜமுத்து, சென்னை வக்கீல் அஜித் டோகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ஜி.வி.பலவேசம் ரமேஷ், நிர்வாகஸ்தர்கள் பி.எஸ்.வேல்ச்சாமி, ராஜேந்திரன், பி.சுந்தரமகாலிங்கம், பேராசிரியர் குருசாமி, நாராயணன், கணக்குப்பிள்ளை அசோகன், கோயில் பூஜாரி மாரிமுத்து, முன்னாள் கிராம தலைவர் நவபன்னீர் செல்வம், உத்திரக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar