Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் மாசி ... ஸ்ரீவி.,சிவன் கோயிலில் மாசிமக உற்ஸவம் ஸ்ரீவி.,சிவன் கோயிலில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
12:02

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமக தேரோட்டம் நேற்று நடந்தது.  ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து  இழுத்தனர். இக்கோயில்  புராதானமானதும், பிரசித்தி பெற்றதுமாகும். வாயிலில் முல்லையாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வது, காசிக்கு அடுத்து இங்கு தான் என்று கூறுகின்றனர். திருமணப் பொருத்தம் மற்றும் கிரகநிலைகளை தெரிந்து கொள்வதற்காக முதல் பிரகாரத்தில் நந்திக்கு மேல் காலச்சக்கரம் அமைக்கப் பட்டுள்ளது வேறு எங்கும் இல்லை.

மாசிமக தேரோட்டம்  பிப். 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்  காலை,மாலையில் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். நேற்று முன்தினம் சுவாமி – அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணியில் இருந்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 5:30 மணிக்கு சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளினர். காலை 10:50 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.  உத்தமபாளையம் சப்கலெக்டர் வைத்தியநாதன், கம்பம் எம்.எல்.ஏ.,. ஜக்கையன், பி.டி.ஆர்.விஜயராஜன், பாஸ்கரன் எஸ்.பி., மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சையதுகான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அங்குபெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எம். தர்வஷே்முகைதீனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கிழக்கு ரதவீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகள் வழியாக மதியம் 2:35 மணிக்கு நிலைக்கு வந்தது. நகர் வீதிகளில் வ.உ.சி. பேரவை , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ,  பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar