Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவனாம்பட்டிணம் கடற்கரையில் மாசி மக ... செஞ்சி கோதண்டராமர் கோவில் மாசி மக தீர்த்தவாரி விழா செஞ்சி கோதண்டராமர் கோவில் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
01:02

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகத்திற்காக லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து, மணிமுக்தாற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன், கடந்த 8 ம் தேதி துவங்கியது. மாசி மகத்தையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, நேற்று முன்தினம் இரவே, மக்கள் குவியத் துவங்கினர்.

இதனால், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பஸ்கள் அனைத்தும் பொன்னேரி புறவழிச்சாலை, பூதாமூர் வழியாக பஸ் நிலையம் சென்றன. அதிகாலை, 3:00 மணியளவில் பொதுமக்கள் மணிமுக்தாற்றில் ஊற்று தோண்டி குளித்துவிட்டு, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டனர். தொடர்ந்து, மணிமுக்தாற்றில் ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் அருகில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபட்டனர். பிற்பகல் 3:00 மணிக்கு மணிமுக்தாற்றில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3:00 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை சண்டிகேஸ்வரர் வீதியுலா நடக்கிறது.

பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத திருவிழா: விருத்தாசலத்தில் தேரோட்டம், மகம் ஆகிய இரு தினங்களிலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிவர். உணவு பண்டங்கள் விற்பனையால் நகரின் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் குவியும். அவற்றை அப்புறப்படுத்த நகராட்சி பணியாளர்கள் திணறுவர். தற்போது, தமிழக அரசு ஒரு முறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகளுக்கு தடை விதித்திருப்பதாலும், அன்னதான நிகழ்ச்சிகளை போலீசார் முறைப்படுத்தியதாலும், பிளாஸ்டிக் குப்பைகள் குறைவாகவே காணப்பட்டன. இதனால், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க கோவில் சன்னதி, பிரகாரங்கள் மற்றும் கோபுரங்களில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவிலின் வெளிப்பிரகாரம், தேரடி, தேரோடும் வீதிகள் என 8 இடங்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar