Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆஞ்சநேயரின் பல வடிவங்களும் சிறப்பும்! ஆஞ்சநேயரின் பல வடிவங்களும் ... சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
15:32

1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும். பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது, மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள். ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும். ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது. இதனை கிண்டலடிப்பவர்களும் உண்டு. எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும். இந்த மொட்டை போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது தெரியுமா..

மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான்.

அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன். குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும், அண்ணன்களும் கூற, என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன் என கர்ஜித்தான் அர்ஜுனன். அப்போது கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும் என்றார். அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும். முன்னோர்களின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.

 
மேலும் துளிகள் »
temple
சிவபெருமானின் ஓர் அம்சமாகப் போற்றப்படுகிறார். சரபேஸ்வரர். சூலிணி மற்றும் பிரத்யங்கிராதேவி ஆகிய ... மேலும்
 
temple
களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். களத்திர தோஷத்தால் குடும்ப வாழ்வில் பிரச்னை ... மேலும்
 
temple
137 அடி உயர திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது.  இதனை திருவாவடுதுறை ஆதீனத்தைச் ... மேலும்
 
temple
பழைய தமிழ்நூல்களில் திருச்செந்தூரை திருச்சீர் அலைவாய் என குறிப்பிட்டுள்ளனர். அலைகள் பொங்கும் ... மேலும்
 
temple
17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் உற்ஸவர் சிலையைக் கடத்தினர். ஆனால் புயல் வரவே, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.