Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழா ... தஞ்சாவூர் பெரியகோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம் தஞ்சாவூர் பெரியகோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2019
05:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

Default Image
Next News

பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே, தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்தபோது, அடி, முடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்த நாள், சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே, பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த, லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் எழுந்தருளிய திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதல் மதியம், 12:00 மணி வரை அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னிதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. மகா சிவராத்திரி அன்று உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்க கொடிமரம் அருகே  மக்காசோளம், அன்னாசிப்பழம் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் முன் உலக நன்மைக்காக 108 கலைஞர்களுடன் நாதஸ்வரம், தவில் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar