Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா நவபாஷாண கடற்கரையில் தேங்கிய கடற் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
01:03

 சென்னை: சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், இன்று துவங்கி, வரும், 20ம் தேதி வரை, பங்குனி பெருவிழா நடைபெற உள்ளதால், 10 நாட்களுக்கு, அந்த பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கச்சேரி சாலை - மத்தள நாராயணன் தெரு, சித்ரகுளம் கீழ் தெரு - சித்ர குளம் வடக்கு தெரு, ஆர்.கே.மடம் சாலை - தெற்கு மாட தெரு வழியாக, வாகனங்கள், கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.

அதேபோல, சித்ரகுளம் நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெரு - கிழக்கு மாட தெரு, புனிதமேரி சாலை - ஆர்.கே.மடம் சாலை, டாக்டர் ரங்கா சாலை - வெங்கடேச அக்ரஹாரம், லஸ் சந்திப்பு - ஆர்.கே.மடம் சாலை வழியாகவும், வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.

ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையில் இருந்து, லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை, சி.பி.ராமசாமி தெரு. ஆர்.கே.மடம் வழியாக, மந்தைவெளியை அடையலாம்.

அடையாறில் இருந்து, ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள், ஆர்.கே.மடம் சாலை, சிருங்கேரி மடம் சாலை, விவேகானந்தா கல்லுாரி, சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக, லஸ் பகுதியை அடையலாம்.

மயிலாப்பூர் கோவில் குளம் அருகே உள்ள, மாநகர பஸ் நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில், அமிர்தாஞ்சன் கம்பெனி அருகே மாற்றப்பட்டுள்ளது.

அதிகார நந்தி திருவிழா நடைபெற உள்ள, மார்ச் 13 காலை, 6:00 மணியில் இருந்து, நிகழ்ச்சி முடியும் வரை, தேர் திருவிழா நடைபெற உள்ள, மார்ச் 17, காலை, 5:00 மணியில் இருந்து, நிகழ்ச்சி முடியும் வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதேபோல, மறுநாள் அறுபத்து மூவர் விழா நடக்க இருப்பதால், மதியம், 2:00 மணி முதல், நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்வாகன நிறுத்தம்.

மார்ச் 17, 18ம் தேதிகளில், சன்னிதி தெரு, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணாமடம் சாலை மற்றும் வடக்குமாட வீதியில், வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.

சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம் மற்றும் மாடி ரயில் நிலைய மேம்பாலத்திற்கு கீழ், வாகனங்களை நிறுத்தலாம். லஸ் சர்ச் சாலை, காமதேனு திருமண மண்டபம் அருகிலும், வாகனங்கள் நிறுத்தலாம். போலீசாரின் வாகனங்கள், சுந்தரேஸ்வரர் தெருவில், பி.எஸ்.சிவசாமி கலாலயா பள்ளி,ஆர்.ஆர்.சபா அருகே நிறுத்த வேண்டும் என, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், நேற்று அறிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar