Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவசைலம் கோயிலில் கொடிமரம் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொட்டல்புதூர் பள்ளிவாசலில் 4ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
11:03

ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் வரும் 4ம் தேதி சந்தனக் கூடு ஊர்வலம் நடக்கிறது.நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தென் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து சிறப்பு தொழுகை நடத்துவர். கந்தூரி விழா கொடியேற்றம் கடந்த மாதம் 23ம் தேதி மதியம் 2 மணியளவில் கீழுர் ஜமாத் நிறைபிறை கொடி ஊர்வலம் மேளதாளங்கள், வீர விளையாட்டுக்களுடன் அலங்கரிக்கப்பட்ட கொடி யானை மீது ஊர்வலமாக புறப்பட்டு பின்னர் பள்ளிவாசலில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து நாளை (3ம் தேதி) இரவு 8 மணிக்கு பச்சை களை ஊர்வலம் நடக்கிறது. 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், மதியம் 12 மணிக்கு அரண்மணை கொடியேற்றமும் நடக்கிறது. 2 மணிக்கு மேலூர் ஜமாத் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு 10 மணியளவில் ரவணசமுத்திரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேளதாளங்கள் வீர விளையாட்டுக்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கி அதிகாலை பொட்டல்புதூர் வருகிறது.5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் பள்ளிவாசல் வந்து சேர்ந்த பின்னர் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்கார வைபவம் நடக்கிறது. 7ம் தேதி 14ம் இரவு சிறப்பு வைபவமும், ராத்திபு ஓதுதலும் நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது.கந்தூரி விழா ஏற்பாடுகளை சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா தலைமையில் வக்கீல்கள் முகமதுரபி, சம்சுதீன் முன்னிலையில் முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar