பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டமாபுரம், கன்யாபரமேஸ்வரி கோவிலில், அம்மனுக்கு, காலை, 7:30 மணிக்கு, அபிஷேகமும், இரவு, 7:30 மணிக்கு, மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது.
பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், இன்று (மார்ச்., 20ல்), காலை, 7:15 மணிக்கு பூங்குழலி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
பெரியகுப்பம், காமராஜ் நகரில் உள்ள மூங்காத்தம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகமும், மாலை, 6:30 மணி அளவில், அம்மன் ஆலய பிரதட்சணமும், நடைபெறுகிறது.திருப்பாச்சூர் லலிதாம்பிகை கோவிலிலும், பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.