Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு அங்காளம்மன் கோவில் ... காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுத்திகரிக்கப்படும் திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை
எழுத்தின் அளவு:
சுத்திகரிக்கப்படும் திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை

பதிவு செய்த நாள்

21 மார்
2019
01:03

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தண்ணீரை சுத்தப்படுத்தும் பணி நடக்கும் நிலையில் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் கிழக்கில் மலையடிவாரத்தில் இப்பொய்கை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும். பொய்கையிலிருந்து தண்ணீர் வெளியேற வழியில்லை.

இங்கு இருந்து தினமும் அதிகாலை தீர்த்தம் (திருமஞ்சனம்) எடுத்து யானையின் மீது கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். கொடி கம்ப அடிப்பகுதி, பலி பீடத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். கார்த்திகை திருவிழா, பங்குனி திருக்கல்யாண பட்டாபிஷேகத்தின் போது, முருகன் தங்க கிரீடத்திற்கு சரவணப் பொய்கை தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படும்.திருவிழா கடைசி நாட்களில் அஸ்தரதேவர் சரவணப் பொய்கையில் நீராடி தீர்த்தம் கொடுப்பது நடக்கும். சுற்றியுள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைக்காக பொய்கையிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்படும்.புனிதம் மிக்க பொய்கையில் அப்பகுதியினர் குளித்தும், துவைத்தும் வருகின்றனர். பழைய பாய், துணிகள், தலையணைகளை தண்ணீருக்குள் போடுகின்றனர். சோப்பு, சீகைக்காய் பவுடர், ஷாம்புகளை பயன்படுத்தி பாலிதீன் பாக்கெட்டுகளை தண்ணீரில் போடுகின்றனர். பொய்கையின் ஒரு பகுதி திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் பொய்கை சுகாதார சீர்கேடு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. குளித்தால் தோல் நோய் ஏற்படுகிறது. பொய்கையை சீரமைக்கவும், சுத்தப்படுத்தவும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆலோசனையின்படி முதற் கட்டமாக இயந்திரம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.அங்கு துவைப்பது, சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்பாட்டை தவிர்த்து, குளிக்கமட்டுமே பொய்கையை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar