Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்கலம்பேட்டை வரதராஜ பெருமாள் ... விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா துவக்கம் விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
10:04

திருவாரூர்: திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில் ஆழி தேரோட்டம், ‘ஆருரா, தியாகேசா’ கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.

Default Image
Next News

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. ‘இக்கோவில் தோன்றிய காலத்தை கூறமுடியாது’ என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.  இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப் பெரியது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடி; தேரின் எடை, 300 டன்; அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை 350 டன். முன்புறம், தேரை இழுப்பதுபோல், நான்கு குதிரை சிலைகள் உள்ளன. ஒவ்வொன்றும், 26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம்.  திருச்சி பெல் நிறுவனம், தேரை நவீனமயமாக்கி, ‘ைஹட்ராலிக் பிரேக்’  அமைத்துள்ளது.

ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, கடந்த 25 ம்தேதி, இரவு 9:00 மணிக்கு, தேருக்கு, தியாகராஜசுவாமி எழுந்தருளிளார். அன்று முதல், சுவாமிக்கு சிறப்புபூஜைகள் நடந்து வந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு, விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை 7:15 மணிக்கு, கலெக்டர் ஆனந்த், மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி, எஸ்.பி.துரை, ஆகியோர் வடம்பிடித்து, ஆழித்தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள்,‘ ஆரூரா... தியாகேசா’...  கோஷங்கள் முழங்க, தேரை இழுத்தனர். தோரின் பின் சக்கரங்கள் புல்டோசர்களால் தள்ளப்பட்டன. ஆடி அசைந்து, நிலையில் இருந்து புறப்பட்ட ஆழித்தேர், கண்கொள்ள காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. தேரோட்டத்தை ஓட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.         

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar