Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா ... லண்டன் கோவில்களுக்குச் செல்லும் அகல் விளக்கு: திருவானைக்காவலுக்கு கவுரவம்! லண்டன் கோவில்களுக்குச் செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்தூர் கோயிலில் மாசி திருவிழா:சுவாமி பச்சை சாத்தி வீதிஉலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2012
10:03

திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா எட்டாம் நாளை முன்னிட்டு நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஏழாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். எட்டாம் திருவிழாவான நேற்று காலை சுவாமி வெள்ளைசாத்தி வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளினார். காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 11.15 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் சுதர்சன், தக்கார் கோட்டை மணிகண்டன், உதவி ஆணையர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் செல்வகுமாரி, ராமசாமி, சுப்பையன், அரிகரமுத்து, ரமணி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு இன்று சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டம் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது. காலை 7.30 மணியளவில் மீன லக்னத்தில் தேரோட்டம் ஆரம்பித்து பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் வலம் வரும்.

தெப்பத்திருவிழா: புதன்கிழமை பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு சுவாமி மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சுதர்சன், தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நாளை மாசித்தேரோட்டம்: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்தேரோட்டம், நாளை(மார்ச் 6) காலை நடக்கிறது. இங்கு, மாசித் திருவிழா பிப்.,26ல் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. ஏழாம் நாளான நேற்றுமுன்தினம் சிவப்பு சாத்தி கோலத்திலும், நேற்று அதிகாலை வெள்ளைச் சாத்தி கோலத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்திலும் (பச்சை பட்டு உடுத்தி, பச்சை மலர்மாலைகளால் அலங்காரம்) சண்முகர், சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலைச் சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான மாசித்தேரோட்டம், நாளை காலை 6 மணியளவில் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar