Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்! சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்? சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!
எழுத்தின் அளவு:
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
02:04

திருமாலும், லட்சுமியும் ஆதிசேஷனின் மீது அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது.திடீரென திருமால் எழுந்தார்.


கருடன் கணப்பொழுதில் அவர் முன் வந்து நின்று, ‘சுவாமி ஏறுங்கள்’ என்றான். அவர் எங்கு போகிறார் எனத்தெரியாவிட்டாலும், தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம்.  பெருமாளும் கருடன் மேல் ஏறி, “அதோ! வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ,” என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், “வேண்டாம்... வைகுண்டத்துக்கே திரும்பி விடு,” என்றார். கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான். அவரைப் பார்த்த லட்சுமி,“சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே!” என்றாள்.


திருமால் சிரித்தபடியே, “லட்சுமி! ஒரு இளைஞன் என் திருநாமத்தை உச்சரித்தபடியே ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றான். கவனக்குறைவாக, வழியில் சலவைத் தொழிலாளி ஒருவன் காயப்போடப்பட்டிருந்த ஒரு சேலையை மிதித்து விட்டான். அதைப் பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவனை விரட்டினான். நான் அவனைக் காப்பாற்ற புறப்பட்டேன். ஓடிய இளைஞன், என் திருநாமம் சொல்வதை விட்டு விட்டு வழியில் கிடந்த கல்லை எடுத்து, சலவைத்தொழிலாளி மீது எறிவதற்கு ஓங்கினான். ‘ஆகா! இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை’ என திரும்பி விட்டேன்,” என்றார். எந்த நிலையிலும் இறைசிந்தனையுடன் இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஓம் அதிதி புத்திரனே போற்றிஓம் அளப்பதற்கு அரியனே போற்றிஓம் அரசாளச் செய்பவனே போற்றிஓம் அர்க்க வனத்தானே ... மேலும்
 
temple news
* உன்னால் எதையும் சாதிக்க முடியும். நம்பிக்கையுடன் முயற்சி செய். * இன்று நீ இருக்கும் நிலைக்கு நீயே ... மேலும்
 
temple news
* தேவையான அளவுக்கு பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம். * தினமும் வீட்டில் பூஜை செய். கோயிலுக்கு செல். ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகாவின் சூடா கிராமத்தில் அமைந்து உள்ளது சூடா ஸ்ரீ சுப்பிரமணியர் ... மேலும்
 
temple news
அரண்மனை நகரமான மைசூரில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் தலக்காடும் ஒன்று. இங்கு ஒரு காலத்தில், 30க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar