Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல், பழநி கோயில்களில் ... பூவராக சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் பூவராக சுவாமி கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
12:04

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயிலில் மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்.,5ல் ராணி சேதுபதி நாச்சியார் தேங்காய் தொடல் நிகழ்ச் சியுடன் துவங்கியது. அன்று இரவு வனசங்கரியம்மன் தெய்வம் காளியூட்டம் நடந்தது.ஏப்.,7 ல் அனுக்ஞை, வாசல்விநாயகர் வழிபாடு நடந்தது. ஏப்., 8 ல் காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

திருவிழா நாட்களில் தினமும் அம்மன் காமாட்சி அலங்காரம், சிவபூஜை அலங்காரம், முருகனுக்கு சக்திவேல் வழங்கும் காட்சி, பிட்டுக்கு மன் சுமந்த காட்சி, திருஞானசம்பந்தருக்கு திருமுலை ஞானப்பால் ஊட்டல் அலங்காரம், அம்மன்தபசு கோலம், தமிழ் வருட பிறப்பில் பஞ்சாங்கம் வாசித்தல், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக காட்சி, திக் விஜயம் நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மீனாட்சியம்மனுக்கும், சொக்கநாதசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதனை கோயில் குருக்கள் ஜி.மனோகரன் நடத்தி வைத்தார். பெண்கள் புதிய தாலிக்கயிறு பெற்று கட்டிக் கொண்டனர். பக்தர்கள் மொய் எழுதினார்கள், பின் பகல் 11:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இன்று ஏப்., 18 ல் பொன் ஊஞ்சல், ஏப். 19 ல் தீர்த்தவாரியும், சுவாமி வீதியுலா நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை சரக அலுவலர் எம்.ராமு, விசாரணைதாரர் ஜி.கண்ணன், நிர்வாகசெயலாளர் கே.பழனிவேல்பாண்டியன் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar