Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் மலைபோல் குவியும் ... மதுரை இஸ்கான் கோயிலில் நாளை கவுர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை: நாளை மூன்றாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மார்
2012
11:03

1200 ஆண்டுகளுக்கு முன், ஆதிசங்கரர் சிருங்கேரி சாரதாம்பாளுக்கு சந்தன விக்ரஹம் ஒன்றைச் செய்து வழிபட்டு வந்தார். 12வது பீடாதிபதியான வித்யாரண்யர், கேரளக் கோயில்கள் போல, ஓடுகள் வேயப்பட்ட மூங்கில் ஆலயத்தை நிர்மாணித்தார். பல நூற்றாண்டுகளாக அபிஷேக திரவியங்களால் ஆராதிக்கப்பட்டு வந்த அந்தச் சிலை சிதிலமானதால், தங்க விக்ரஹம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். 33ம் பீடாதிபதியான சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ மகாசுவாமிகள் கோயிலில் கருங்கல் வேலைப்பாடு செய்தார். தற்போது பொறுப்பில் இருக்கும் பாரதீ தீர்த்த சுவாமிகள், மூலஸ்தானத்திற்கு தங்கத்தாலான நிலைப்படி, கதவு,தேர் நிர்மாணித்தார். சிற்பவேலைப்பாடுடன் கூடிய நவரங்கமகா மண்டபத்தையும் உருவாக்கினார். தூண்களில் துர்கா, ராஜராஜேஸ்வரி வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிருங்கேரி மட வளாகத்திற்குள் நரசிம்ம வனம் என்னும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு தியானம் செய்வதற்காக, 33ம் பீடாதிபதி ஜகத்குரு சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ சுவாமிகள் அடிக்கடி செல்வது வழக்கம். அவரின் விருப்பத்தை அறிந்து, மடத்தின் தலைமை அதிகாரி கட்டடம் ஒன்றைக் கட்டினார். அதற்கு "ஸ்ரீ சச்சிதானந்த விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அருகிலேயே, தற்போது "குருநிவாஸ் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே, பாரதீதீர்த்த சுவாமிகள் தங்குமிடம். குருநிவாஸில் பிரம்மாண்டமான பூஜை வளாகம் உள்ளது. அங்குள்ள, சுவர்ணமண்டபத்தில் சந்திரமவுலீஸ்வரர் என்னும் ஸ்படிகலிங்கத்திற்கு சந்நிதி உள்ளது. இங்கு ரத்னகர்ப்ப கணபதி, லட்சுமி நரசிம்மர், விஷ்ணு, சக்தி, சாளக்ராமங்கள் ஆகியவையும் உள்ளன. சந்திரமவுலீஸ்வரர் என்னும் ஸ்படிக லிங்கம், ஆதிசங்கரர் சிருங்கேரி சாரதாபீடத்தை உருவாக்கிய போது, கயிலாயத்தில் சிவனிடம் இருந்து பெற்றது. இதுவே, சிருங்கேரி பீடத்தின் நித்ய ஆராதனை லிங்கம். 1200 ஆண்டுகள் பழமை மிக்க இதற்கு, தினமும் இருமுறை அபிஷேகம் செய்வர். இரவு பூஜையை ஜகத்குரு பாரதீதீர்த்த சுவாமிகள் நடத்துவது சிறப்பு. நாளை சேலம், இரண்டாவது அக்ரஹாரம் சிருங்கேரி சங்கரமடத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். தொடர்பு எண்: 99449 63750.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது. இணை கமிஷனர் செல்லதுரை, உதவி கமிஷனர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar