Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்குளி முத்துமாரியம்மன் ... ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாதஸ்வாமி கோவில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2012
11:03

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமபாடியில் சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத ஸ்வாமி கோவில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப்பட்டதும், திருமால், இந்திரன், ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது இக்கோவில். இறைவன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றதுடன், ஐயடிகள் காடவர் கோனால் பதிகம் பாடப்பெற்ற பெருமை மிக்க இத்தலத்து சிவபெருமான், வஜ்ரதம்பேஸ்வரர், மழுவாடி ஈசன், திருமழுவாடி மகாதேவன், என்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக வைகாசி விசாக நாளில் மழுவேந்தி நடனமாடி காட்சியளித்த இத்தலத்தில் தான், நந்தியெம்பெருமான் சுயஸாம்பிகா தேவியுடன் திருமணம் கொண்டருளிய புராண சிறப்பு மிக்கதாகும். பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாரம்பரிய பெருமை மிக்க இக்கோவிலின் மாசி மக பெருந்திருவிழா, கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஆதிஷே வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்டவற்றில், இறைவனும் இறைவியும் நாள்தோறும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். கடந்த 4ம் தேதி ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை 11.30 மணிக்கு துவங்கி நான்கு ராஜவீதிகளிலும் நடந்தது. தேரோட்ட துவக்க விழாவில் அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் சீனிவாசன், திருமழபாடி பஞ்சாயத்து தலைவர் கர்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வைத்தியநாத ஸ்வாமியும், சுந்தராம்பிகையும் நான்கு ராஜவீதிகளிலும் எழுந்தருளினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar