Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைத்தியநாதஸ்வாமி கோவில் தேரோட்டம் சஞ்சீவிராயன்பேட்டையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2012
12:03

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவிலில் சிமகப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. ஆன்மாக்கள் உய்வு பெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்குக் காரணமாகிய ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்துத் தந்து அதனையே சிவலிங்க மூர்த்தியாக அமைத்து தம்மை தாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவில். இங்கு 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாகி அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதிதியானவர் மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலம் ஆகும். இத்தகைய சிறப்புடைய இக்கோவில் மூலமே 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாமகத்திருவிழா நடந்து வருகிறது. அத்துடன் ஆண்டுதோறும் நடந்து வரும் மாசிமகப்பெருந்திருவிழா இக்கோவிலை முன்னிறுத்தியே நடக்கிறது. இத்தகைய சிறப்புடைய கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமக விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு தனித்தனி தேரோட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன், ஒப்பிலியப்பன் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் ராயா.கோவிந்தராஜன் உள்ளிட்ட பல பிரமுகர்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். காலை 10.30 மணியளவில் தேர்கள் நிலையை வந்தடைந்தன. சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று 7 ம் தேதி கும்பகோணம் மகாமக குளத்தில் காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar