Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவி.,யில் இன்று தெப்ப திருவிழா பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

ஈரோடு : ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் மாசி மாதம் குண்டம் திருவிழா, ஃபிப்ரவரி 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ல் கொடியேற்றமும், தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. மார்ச் 6ம் தேதி இரவு 7 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று முன்தினம், அதிகாலையில் கோவிலில் குவிந்த பக்தர்கள், தங்களின் வேண்டுதலுக்கேற்ப குண்டத்துக்கு தேவையான மரக்கட்டைகளை காணிக்கையாக வழங்கினர். முன்னதாக, 5ம் தேதி இரவு முதலே கோவிலின் முன், குண்டம் இறங்க பக்தர்கள் காத்துக் கிடந்தனர். நேற்று, காலை 4 மணிக்கு, பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். சில பெண்களும், ஆண்களும், கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினர். குண்டம் திருவிழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம், விழாக்குழு சார்பில் நீர்மோர், கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்றிரவு 9 மணிக்கு பத்ரகாளியம்மன் நூதன அலங்காரத்துடன், நாதஸ்வர இன்னிசையுடன் நகர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை 5 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar