Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலத்தூர் கரிய காளியம்மன் கோவிலில் ... குடந்தை சாரங்கபாணி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்கரபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமகத்தையொட்டி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

கும்பகோணம்: மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணிஸ்வாமி கோவிலின் திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக திகழும், சிறப்புமிக்க வைணவ தலம் சக்கரபாணி சுவாமி கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று மூர்த்திகளின் சொரூபமாகவும், சூரியபகவான் சரணாகதி அடைந்த தலம் என்பதால், பாஸ்கரஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட இத்தலம் சகல தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகார, பிரார்த்தனை தலமாகவும் போற்றப்படுகிறது. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 28ம் தேதி காலை 7.30மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் மாசிமகப்பெருவிழா துவங்கியது. நாளை (9ம்தேதி வரை) இவ்விழா நடைபெற உள்ளது. இதற்கிடையில் நடைபெற்ற இவ்விழா நாட்களில் இந்திரவிமானம், சந்திரபிரபை, சேஷவாகனம், ஓலைச்சப்பரத்தில் கருடசேவை, அனுமந்தவாகனம், யானை வாகனம், சூர்ணாபிஷேகம் என, தினம் ஒரு வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் (6ம் தேதி) காலை வெண்ணெய்தாழியும், இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடந்தது. நேற்று மாசிமகத்தை முன்னிட்டு அதிகாலை விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் சக்கரபாணிசுவாமி தேரில் எழுந்தருளினார். காலை 6.45 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளையும் சுற்றிவந்து நிலைக்கு நேற்று காலை 11.45மணிக்கு தேர் வந்தடைந்தது. தொடர்ந்து சக்கரபாணி சுவாமி காவிரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறிய ரதத்தில் ஸ்வாமி தாயாருடன் எழுந்தருள ரதப்புறப்பாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar