Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ... ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு! ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் தெப்பத் திருவிழா:10 ஆண்டுக்குப்பின் தெப்பத்தில் பெருமாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மார்
2012
10:03

அழகர்கோவில் : அழகர்கோவில் தெப்பத் திருவிழாவில் பத்து ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தெப்பத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் குளக்கரையை பெருமாள் சுற்றி வருவார். இந்தாண்டு பொய்கைக்கரைப்பட்டி மக்களுடன் இணைந்து கோயில் நிர்வாகத்தினர் மலையில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தனர். இதனால் மழைநீர் தெப்பத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தாண்டு தெப்ப உற்சவம் மார்ச் 6ல் துவங்கியது. அன்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் கோயிலை வலம் வந்தார். மறுநாள் கஜேந்திர மோட்சம் நடந்தது. நேற்று நடந்த தெப்பத் திருவிழாவில் தெப்பத்தில் சுந்தரராஜப்பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். காலையில் ஒரு முறையும், மாலையில் இரு முறையும் குளத்தை வலம் வந்த பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். நிர்வாக அதிகாரி செல்வராஜ் கூறுகையில், கிராமத்தினர் உதவியுடன் தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. குளத்தைச்சுற்றி மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. மைய மண்டபம் சிதைந்து உள்ளது. தண்ணீர் வற்றியவுடன் புதுப்பிக்கப்படும். குளக்கரையை சுற்றி பேவர்பிளாக் கற்கள் பதித்து, பார்க் அமைக்கும் திட்டமும் உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar