பதிவு செய்த நாள்
09
மே
2019
03:05
குன்னூர்: குன்னூர் ஐயப்பன் கோவிலில், நாளை (மே., 10ல்) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. குன்னூர் ஐயப்பன் கோவிலில் கணபதி சிவபெருமான், விஷ்ணு, துர்கை, சுப்ரமணியர், சிவன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னிதிகள், மண்டபங்கள் புனரமைப்பு பணிகள் முடிந்தது. இந்நிலையில், ஆச்சார்ய வர்ணம், சாஸ்தாவுக்கு முளைப்பாரியிடுதல், அத்தாழபூஜை ஆகியவற்றுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து சபரிஹால் திறப்பு விழா நடந்தது.நாளை (மே., 10ல்) காலை, 10:00 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து ஜீவ கலசாதி எழுந்தருளல், ஆவாகனங்கள் செய்தல், வாகன பூஜை, பாயச பூஜை, பிரம்ம கலச அபிஷே கங்கள், நித்ய பூஜை, மகா அன்னதானம் ஆகியவை நடக்கின்றன. 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை, 3:00 மணிக்கு ஐயப்பன் திருவீதி உலா, வாண வேடிக்கை ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை ஸ்தாபகர் குருசாமி சங்கர் சுவாமி,
ஐயப்ப பக்த சங்கத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.