பதிவு செய்த நாள்
09
மே
2019
03:05
சென்னிமலை: சென்னிமலை, கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று (மே., 8ல்) மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. யாக வேள்வியில், தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வருண மந்திரம் உச்சரித்தனர். இதில் வித்தியாசமாக, மூலவருக்கு எதிரில் உள்ள நந்தி சிலை, தண்ணீரில் மூழ்க வைக்கப்பட்டது. வரும் மூன்று நாட்களுக்கு, வருணனை வேண்டி இதே நிலையில், நந்தி சிலை இருக்கும். மூச்சு விட முடியாமல் தவிக்கும் நந்தியம் பெருமானை பார்க்கும் கைலாசநாதர், வருண பகவானிடம் மழை பொழிய உத்தரவிடுவார் என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், தண்ணீரில் மூழ்கிய நந்தி சிலை மீது, மலர் தூவி வணங்கினர். அதன் பின், கலச ஊர்வலம் நடத்தி கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.