பதிவு செய்த நாள்
09
மே
2019
03:05
சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோவிலில், மழை வேண்டி அறநிலையத்துறை சார்பில், வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நேற்று (மே., 8ல்) நடந்தது.
சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரிஅம்மன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாக பூஜை நேற்று (மே., 8ல்) காலை, 9:30 மணியளவில் நடந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், மழை குறைந்து தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகபூஜை
நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (மே., 8ல்) பண்ணாரிஅம்மன் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜை தொடங்கியது. வேதவிற்பன்னர்கள் நடத்திய, சிறப்பு யாக பூஜையில் அறநிலையத்துறை அலுவலர்கள், பரம்பரை அறங்காவலர் கள், சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பண்ணாரிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.
* கோபி அருகே, பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. தாரா பாத்திரத்தில் புனிதநீர் நிரப்பி, அதன் மூலம் அமரபணீஸ்வரருக்கு அபிஷேகம்
நடந்தது. பின் கலசத்தில் புனித தீர்த்தம் வைத்து, அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்கள் சிறப்பு யாகம் நடத்தினர். காலை, 10:30 மணிக்கு துவங்கிய சிறப்பு யாக பூஜை மதியம், 12:00 மணி
வரை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் நாகராஜ் மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.