பதிவு செய்த நாள்
09
மே
2019
04:05
சேலம்: அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெப்பத்திலிருந்து மக்களை காக்க, மழை பெய்ய வேண்டி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், சிறப்பு அபிஷேகம், ஹோமம், யாகம் நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று (மே., 8ல்)காலை, அம்மனுக்கு பால், இளநீர், பன்னீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு யாகம் நடந்தது. அதில்,
திரளானோர் அம்மனை வழிபட்டனர். அதேபோல், ராஜகணபதி கோவிலில், மழை வேண்டி சிறப்பு அபிஷேகம், யாகம் நடந்தது.
மேலும், சங்ககிரி, ஒருக்காமலை, வரதராஜ பெருமாள் கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு, சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம்
நடந்தது.