பதிவு செய்த நாள்
09
மே
2019
04:05
வேலூர்: நாராயணி பீடத்தில் நடந்த, 10 ஆயிரத்து எட்டு, மஞ்சள் நீர் கலசாபிஷேக விழாவில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார். வேலூர் அடுத்த, திருமலைக்கோடி நாராயணி பீடத்தில், 27வது ஆண்டு விழாவையொட்டி, உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாராயணி பீடத்தில் சுயம்புவாக தோன்றியுள்ள அம்மனுக்கு, பக்தர்கள் தங்கள் கைகளாலேயே மஞ்சள் நீர் கலசாபிஷேகம் செய்யும் விழா நேற்று(மே., 8ல்) நடந்தது. இதையொட்டி நேற்று (மே., 8ல்) காலை, 7:00 மணிக்கு சக்தி அம்மா, அம்மனுக்கு மஞ்சள் நீர் கலசாபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து, 10 ஆயிரத்து எட்டு, பக்தர்கள் சில்வர் குடங்களில் மஞ்சள் நீர் எடுத்துச் சென்று, தங்கள் கைகளால் கலசாபிஷேகம் செய்தனர். இதில், மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.