பெரிய மாரியம்மன் கோயில்: பூக்குழித் திருவிழா கொடியேற்றம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2012 11:03
ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை காப்பு கட்டுதல் நடந்தது. கொடிப்பட்டம் மாரியம்மன் கோயில் தெரு, சாலியர் சமூக பொது சாவடியிலிருந்து புறப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியை பூசாரி ஹரிஹரன் ஏற்றினார். விழாவில் தக்கார் குருநாதன், செயல் அலுவலர் சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அம்பாள் சிங்க வாகனத்தில் வீதியுலா நடந்தது. 17ம் தேதி இரவு பூ பல்லக்கு, 22ம் தேதி மதியம் 2 மணிக்கு பூக்குழி இறங்குதலும், 23ம் தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மஞ்சள் நீராட்டும், யானையில் வீதியுலாவும் நடக்கிறது.