Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) செவ்வாயால் செல்வாக்கு மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2019 முதல் 17.8.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
11:02

குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. ஆனால் அவரது 7-ம் இடத்துப் பார்வையால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. சுக்கிரன் ஜூன்6ல் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறினாலும் நற்பலன் கொடுப்பார். ராகு மற்றும் செவ்வாயால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதன் மே29 வரை உங்கள் ராசிக்கு 2ல் இருப்பதால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன்பின் அவர் 3-ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான நிலையல்ல.  

குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். அவரால் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுக்கிரனால் சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்வீர்கள். ஜூன்3க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.  சமூக மதிப்பு கூடும்.

மனதில் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்களில் வெற்றி காணலாம். மே29க்கு பிறகு  அக்கம்பக்கத்தினரால் தொல்லை வர வாய்ப்புண்டு. அவர்களிடம் நெருக்கத்தை தவிர்க்கவும்.  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. இடமாற்ற பீதி மறையும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  மே29க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் அக்கறையுடன் வேலை செய்யவும். இருப்பினும் ஜூன்4க்கு பிறகு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் கிடைக்கும். மே24,25ல் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும்.

வியாபாரிகளுக்கு ராகுவால் தொழில் விருத்தி உண்டாகும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை அடைவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். மே29க்கு பிறகு வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே15, ஜூன்11,12ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

கலைஞர்கள் சிறப்பான வருமானத்தை பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஜூன்4க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி கிடைக்க பெறுவர்.  

மாணவர்கள்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். இருப்பினும் மே18 வரை குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகள்  மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புது சொத்து வாங்கும் எண்ணம்  நிறைவேறும்.  

பெண்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். செவ்வாயால் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். மே29க்கு பிறகு உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் கூட இணக்கமாக வருவர். ஜூன்5,6ல் ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப்பெறலாம். மே16,17,18, ஜூன் 13,14 சிறப்பான நாட்களாக அமையும்.

* நல்ல நாள்: மே 15,16,17,18,24,25,26,27,28,31 ஜூன் 1,5,6,11,12,13,14
* கவன நாள்:  மே 19,20, ஜூன் 15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
● சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபம்
● குலதெய்வத்தை வழிபட்டு பயறு தானம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2019 முதல் 17.8.2019 வரை) »
temple
சுக்கிரன், ராகு தொடர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பர். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் புதன் ஆக. 3ல் ... மேலும்
 
temple
பொருளாதார வளம் பெருகும் மாதமாக அமையும். சூரியன், சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மை செய்வர். ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரனால் பெருமையுடன் வாழ்வீர்கள். தற்போது செவ்வாய் கடக ராசியில் இருக்கிறார். அவர் ஆக.10ல் ... மேலும்
 
temple
சனி, கேது, குருவால் மாதம் முழுவதும் நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்களின் பாதிப்புகளை இந்த மூன்று ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23 வரையும், புதன் ஆக.2 வரையும் நற்பலனை தருவார்கள். அதன் பிறகு முக்கிய கிரகங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.