Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயூரநாதர் கோயிலில் திருக்கல்யாணம் திருமலையில் மழை வேண்டி ஐந்து நாள் யாகம் திருமலையில் மழை வேண்டி ஐந்து நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

பதிவு செய்த நாள்

15 மே
2019
11:05

திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று அதிகாலை, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா, கடந்த மாதம், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது. மேலும், மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.நேற்று அதிகாலையில், கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 35 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது.தொடர்ந்து அர்ச்சுனன் தவ வேடத்தில் பக்தர்கள்,பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும், ஒரு பாடல் பாடியவாறு ஏறினர். அதை தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து, அர்ச்சுனன் தவம்புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் பனை மரத்தின் கீழ், திருமணம், குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், உற்சவர் திரவுபதியம்மனை வழிபட்டனர்.வரும், 19ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar