Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா: ... 200 ஆண்டுகள் பழமையான கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலாவுக்கு பாரம்பரியமாக விழா எடுத்து பெருமை சேர்க்கும் மக்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 மார்
2012
11:03

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் "நிலாவுக்கு பாரம்பரியமாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் விழா நடந்து. காரைக்குடி, கழனிவாசல், கோட்டையூர், பலவான்குடி, கொத்தரி, பள்ளத்தூர், நேமத்தான்பட்டி, வடகுடி உள்ளிட்ட 16 ஊர்களில் பல நூற்றாண்டுகளாக வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். "பாளைய நாடு என்றழைக்கப்படும் இந்த கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமியையொட்டி நிலாவுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி வடகுடி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட வல்லர் குடும்பத்தை சேர்ந்த மக்கள் ஊர் நடுவே ஒரே இடத்தில் ஒன்றுகூடி இரவு 10 மணிக்கு மேல் நிலாவை பார்த்தபடி பொங்கலிட்டனர். இரவு 11 மணிக்கு மேல் நிலவொளி உச்சிக்கு வந்தவுடன் பெண்கள் ஆனந்தத்துடன் கும்மியடித்து பாட்டு பாடி தங்களது மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் கொண்டனர். பின், வீடுகளில் சமைத்து கொண்டு வந்த பலகாரத்தை பகிர்ந்துண்டும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அக்கிராமத்தை சேர்ந்த பி.ஆர்., அழகப்பன், 60, கூறுகையில், "" எங்கள் சமூகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் விவசாய கூலி வேலை செய்கின்றனர். அறுவடை முடிந்து மாசி மாதத்தில் வரும் நிலாவுக்கு பாரம்பரியமாக விழா எடுப்பது வழக்கம். பாளையநாடு என்றழைக்கப்படும் 16 கிராமங்களில் மட்டுமே இவ்விழா நடக்கும். தங்களை மகிழ்வித்து வரும் நிலாவுக்கு சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே விழா எடுப்பது பெருமையாக உள்ளது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar