Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் ... விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
12:02

சென்னை : சென்னை விமான நிலையம் எதிரே உள்ள, திரிசூலம் மலையில், சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பட்டா நிலங்கள், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள கிராமம் திரிசூலம். மலை மீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவிலால், இந்த ஊருக்கு, திரிசூலம் என, பெயர் கிடைத்தது.இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர்.

அன்னதானம் : பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடக்க, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களை சுற்றிலும் வைத்து பூஜித்ததாகவும், லிங்கத்தை சுற்றி இருந்த நான்கு வேதங்களும், மலைகளாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகிறது.மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே, அங்கிருந்த சிவபெருமானை, திருச்சுரமுடைய நாயனார் என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் திரிசூலநாதரானார்.கோவிலை சுற்றியுள்ள நான்கு மலைகளிலும், கார்த்திகை தீபத்தின் போது, தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு. இக்கோவிலில், சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன், இறகு இல்லாமல் அருள் பாலிக்கிறார். விநாயகரின் ஆறு அவதாரங்களில், மூலாதார சக்தியான குண்டலினி, நாகவடிவில் இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் பிரார்த்தனை தலமாகவும், இக்கோவில் விளங்குகிறது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு சொந்தமாக, நுாறு ஏக்கருக்கும் மேற்பட்ட, பட்டா நிலம் உள்ளது.கோவிலை சுற்றி மட்டும், 80 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கோவிலின் நித்திய பூஜைகள், திருவிழாக்கள், கோவில் முகப்பில் உள்ள சத்திரத்தில், சிவ பக்தர்களுக்கு, எப்போதும் அன்னதானம் வழங்கப்பபட்டு வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple
ஏகனாம்பேட்டை: உலக நன்மை வேண்டி, தசபுஜ சம்ஹார பைரவ யாகம் நேற்று நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, ... மேலும்
 
temple
பழநி: பழநி முருகன் கோவில், அதன் உபகோவில் உண்டியல்களில், 50 நாட்களில், 5, கோடியே, 18 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய், ... மேலும்
 
temple
குர்திஸ்தா: மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் மலை ஒன்றில் ஹிந்துக் கடவுளான ராமரின் உருவம் ... மேலும்
 
temple
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரியில், மோசூரம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.