கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ரூ.16 லட்சம் உண்டியல் வசூல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2019 02:05
கடலூர் : பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 16 லட்சத்து 66 ஆயிரத்து 756 ரூபாய் கிடைத்துள்ளது.
கடலூரில் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று (மே., 21ல்) நடந்தது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதில், 16 லட்சத்து 66 ஆயிரத்து 756 ரூபாய் ரொக்கம், 43 கிராம் தங்கம், 490 கிராம வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் சித்ரா உடனிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.